பக்கங்கள்

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

பட்டயா ஒரு உல்லாச நகரம்.

பகல் முழுவதும் சாதாரணமாக..மிகச் சாதாரணமாக காட்சியளிக்கும் பட்டயா நகரம், மாலை வேளைகளில் கொண்டாட்ட குதூகளங்களை ஆரம்பிக்கும். நள்ளிரவில் உச்சஸ்தாயியில் வேகம் பிடிக்கும். விடிகாலை 4 மணி வரைக்கும் பரபரப்பாகவே இருக்கும்.

தலைநகர் பேங்காக்கிலிருந்து சுமார் இரண்டு மணி நேரப் பயணம். பேருந்தில் 90 பாட் செலவிலும், டாக்ஸியில் 1,500 பாட் செலவிலும் பட்டயாவிற்கு செல்ல முடியும்.

பட்டயா செல்லும் வழியில் சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் திரும்ப வரும் போது பார்த்துக் கொள்ளலாம். அதெல்லாமா முக்கியம்?!

ஒட்டு மொத்த தாய்லாந்து கலாசாரத்தையும் பட்டயா நகரிலேயே நாம் கண்டு களிக்கலாம்.

பழமையும், புதுமையும் கலந்து விருந்து படைக்கும் கலக்கல் சாம்பெய்ன் என்று பட்டயாவைச் சொல்லலாம்.



உலகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் பட்டயாவில் வந்து குவிகிறார்கள் என்றால் சும்மாவா?!

குறிப்பாக இந்தியாவில் இருந்து ஏராளமானோர் பட்டாயா செல்லவே விரும்புகிறார்கள்.

’பலான’ மசாஜ் செண்டர்கள் குவிந்து கிடப்பது மட்டுமே காரணமல்ல. ஒரு புள்ளிவிபரத்தின் படி கடந்த ஆண்டு பட்டயாவில் வந்திருந்த டூரிஸ்டுகளில் 30 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் தங்களுடைய ஹனிமூனைக் கொண்டாடுவதற்காக பட்டயா வந்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்கள்.

பட்டயா நகரின் மையப் பகுதியில் இருக்கும் ‘Walking Street’

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த தெரு தான் முக்கியமாக டூரிஸ்டுகளை தாய்லாந்துக்கு தள்ளி வருகிறது என்றால் மிகையல்ல.

தெருமுழுக்க கேளிக்கை விடுதிகள் தான். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான்.

சும்மாவாச்சும் சுற்றிப் பார்த்து விட்டு வரவேன் என்று விரதம் இருப்பவர்களுக்கும் இங்கே கண்ணுக்கு குளிர்ச்சி காத்திருக்கும். கடல் உணவு, தாய் உணவு, இந்தியன் உணவு, மெக்ஸிகன் உணவு என சகல விதமான உணவும் கிடைக்கும். உலகம் முழுக்க கிடைக்கும் பீர் உள்ளிட்ட சகல ‘தண்ணி’ வகைகளும் கிடைக்கும். உணவு, தண்ணி போன்றவற்றிலேயே உலக வெரைட்டி வைத்திருப்பவர்கள் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மேட்டரிலும் வைத்திருக்க மாட்டார்களா என்ன?

ரஷ்யா, உஸ்பெஸ்கிஸ்தான், ஜப்பான், சீனா உள்ளிட்ட உலகளாவிய ரேஞ்சுடன் உள்ளூர் தாய்க்கிளிகளும் இந்த ஏரியாவில் வட்டமடிக்கும் என்று விபரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

மாலை 6 மணிக்கெல்லாம் இந்த தெருவில் வாகனப் போக்குவரத்தை நிறுத்தி வைத்து விடுகிறார்கள். தெருவின் இரண்டு முனைகளிலும் பலத்த போலீஸ் காவல். கூடவே ‘எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம்’ வேறு செய்கிறார்கள். தேவை தான்!

தெருவில் நடந்து கொண்டிருக்கும் போதே வரிசையாக ‘பேரம்’ பேசிக் கொண்டிருக்கும் பேரிளம் பெண்களை காண முடியும். பேசாமல் நடந்து கொண்டிருக்கும் பெண்களைக் கூப்பிட்டு ‘என்னா ரேட்டு?’ என்று தெனாவெட்டாக கேட்பவர்களயும் பார்க்கலாம். சிலர், “அய்யே.. நான் அந்த மாதிரி பெண் இல்லைங்க” என்று சொல்லிவிட்டு ஸாரி சொல்லிவிட்டு நகர்வார்கள். அவர்களெல்லாம் அங்கே உள்ள ’சாதாரண’ கடைகளிலும், உணவு விடுதிகளிலும் பணி புரிபவர்களாகவோ அல்லது சுற்றுலாப் பயணிகளாகவோ இருப்பார்கள். மற்றபடி நடுரோட்டில் நிறுத்தி ரேட் கேட்கிறானே என்று கூச்சல் கூப்பாடு போடுவதெல்லாம் கிடையாது. ‘பாம்பு திங்கிறவன் ஊரிலே நடுத்துண்டு நமக்குதான்’ என்ற எண்ணத்தில் தான் அப்படி கேட்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாதா என்ன?

இன்னும் ஒரு சிலர், “அய்யே.. நான் பெண்ணே இல்லைங்க” என்பார்கள். அவர்கள் திருநங்கைகள். அச்சு அசலில் பெண் போலவே முழு மேக்கப்பில் இருப்பார்கள். தாய்லாந்து முழுக்க இப்படி ‘பலான’ தொழிலில் திருநங்கைகள் கொடிகட்டிப் பறப்பதை பார்க்க முடியும். ஆச்சரியமாக பல ஐரோப்பியர்கள் இந்த மாதிரியான திருநங்கைகளைத் ‘தேடி’ ஓடுவதையும் பார்க்க முடியும். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு டேஸ்ட், இல்லையா?!

எல்லாருக்குமே ஒரே டேஸ்ட்டாக இருந்து விட்டால் பல வகையான உணவுக் கடைகளுக்கே வேலை இல்லையே!

இந்த ‘நடைத் தெருவிலேயே’ பல தங்கும் விடுதிகளும் உள்ளன. சாதாரண நாட்களில் 600 பாட் ரேஞ்சிலேயே ஓரளவிற்கு தரமான ஏ.சி. அறைகள் கிடைக்கும். விடுமுறை தினங்களில் கூட்டத்தைப் பொறுத்து இது இரண்டு, மூன்று மடங்காக மாறும்.

சுனாமிக்குப் பிறகு பொதுவாகவே தாய்லாந்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டது. இதில் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் காரணங்களுக்காக நடக்கும் பிரச்னைகளினால் கூட வெளிநாட்டுப் பயணிகள்வரத்து குறைந்திருக்கிறது.

விமான நிறுவனங்கள் மூலம் சல்லிசாக டிக்கெட் வழங்கியும், இலவச விசா வழங்கியும் சுற்றுலாப் பயணிகளை மீண்டும் கவரத் தொடங்கியுள்ளது தாய்லாந்து.

கேளிக்கை விடுதிகள், பெண்கள், மசாஜ் செண்டர்கள்.. இவ்வளவு தானா தாய்லாந்து?

இல்லை.. இது மட்டுமே தாய்லாந்தில்லை. இவையெல்லாம் மக்களை திரும்பிப் பார்க்கச் செய்யும் ஆரம்ப காரணிகள்.

பட்டயா நகரிலேயே இன்னும் பார்க்க நிறைய இருக்கிறது.

’வாக்கிங் ஸ்டீரீட்’ மறுமுனையில் இருந்து காலை ஏழு மணியிலிருந்தே மக்கள் கூட்டம் கூட்டமாக ஸ்பீடு போட் மற்றும் பெரிய கப்பல்களின் கிளம்புவார்கள்.

எங்கே தெரியுமா?

‘கோரல் ஐலேண்ட்’..
















2 கருத்துகள்:

  1. 2013 ஆண்டு சென்றுள்ளேன் பார்க்க பார்க்க அழகு தேவதைகள் நாம் அவர்களுடம் இன்பம் அனுபவிக்கலாம் இப்படி பல விஷயங்கள் பல

    பதிலளிநீக்கு
  2. 2013 ஆண்டு சென்றுள்ளேன் பார்க்க பார்க்க அழகு தேவதைகள் நாம் அவர்களுடம் இன்பம் அனுபவிக்கலாம் இப்படி பல விஷயங்கள் பல

    பதிலளிநீக்கு